Tuesday, March 16, 2010

உட்பொருள் அறிதல் - ஜென் கதை

ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்

‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’

‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’

‘இது ஏன்’ என்று குரு வினவினார்

சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர்

‘ ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’
‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’

பலவாறு விடைகள் வந்தன

எதுவும் குருவை திருப்திப்படுத்தவில்லை

‘நீங்கள் அனைவரும் வெறும் வார்த்தைகளைக் கேட்டு விடை மொழிகிறீர்கள்’
‘ஒருவரும் சரியான விடை கூறபோவதில்லை’ என்றார்.

சீடர்கள் யாரும் சரியான பதில் கூறவில்லை.


குரு சொன்ன பதில் :

ஒருவர் மட்டும் நனையவில்லை, இருவருமே நனைந்தனர் என்பது தான் விடை.

வெறும் வார்த்தையை மட்டும் வைத்துப் பார்த்தால் ஒருவர் நனையவில்லை மற்றவர் நனைந்தார் என்று பொருள் கொள்வோம். அதன் உட்பொருள் அறிந்தால் விடை விளங்கும்.

Sunday, August 9, 2009

கடவுள் தண்டிப்பாரா?


இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"
தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"
யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"
இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.

எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.


நன்றி : ஜீவன் முக்தி
பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள்

Sunday, May 24, 2009

ஜென் குரு - தியானம்

ஒரு இளவரசன் ஒரு ஜென் குருவிடம் வந்து தியானம் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினான். ஆனால் அவனுக்கு அவசரம். ஏனெனில் அவனது தந்தைக்கு வயதாகி விட்டது. அவர் இவனை இந்த ஜென்குருவிடம் தியானம் கற்றுக்கொள்ள அனுப்பியிருக்கிறார்.
 
தந்தை, என் வாழ்வில் நான் அதிக காலங்களை தேவையின்றி வீணடித்து விட்டேன். பின்புதான் வாழ்வில் ஒரே அர்த்தமுள்ள விஷயம், மதிப்பிற்குரிய விஷயம் தியானம் என அறிந்தேன். அதனால் உனது காலத்தை வீணடிக்காதே. என தன் மகனிடம் கூறிவிட்டு, நீ இந்த குருவிடம் சென்று தியானம் செய்ய கற்றுக்கொண்டு நான் இறப்பதற்குள் திரும்பி வா. நீ தியானம் செய்ய தெரிந்து கொண்டு விட்டால் நான் சந்தோஷமாக இறப்பேன். நான் இதை தவிர வேறு எதையும் கொடுக்கமுடியாது. இந்த ராஜ்ஜியம் சிறிதும் மதிப்பற்றது. இது உனது உண்மையான அரசாங்கம் அல்ல. உனக்கு இந்த ராஜ்ஜியத்தை கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீ தியானம் செய்ய உதவியிருந்தால்தான் நான் உண்மையான மகிழ்ச்சியடைவேன். என்றார். 
 
அதனால் இளவரசன் இந்த ஜென்குருவிடம் வந்து, நான் அவசரத்திலிருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகிவிட்டது. அவர் எந்த விநாடியும் இறந்து விடுவார். எனக் கூறினான்.
 
குரு, தியானத்திற்கான முதல் அடிப்படையே அவசரப்படக்கூடாது என்பதுதான். பொறுமையில்லாதது வேலைக்காகாது. போ வெளியே, இங்கிருந்து போய்விடு திரும்பவும் இங்கே வராதே. யாராவது ஒரு போலி குருவை கண்டுபிடிக்க முயன்று பார். அவர் ஜபிக்க ஒரு மந்திரம் சொல்லித் தருவார், இதை காலை பதினைந்து நிமிடம், மாலை பதினைந்து நிமிடம் அமர்ந்து சொல்லி வா. உனக்கு முக்தி கிடைக்கும் என்று உனக்கு ஆறுதலாகக் கூறிவிடுவார்.
 
ஆனால் நீ இங்கிருக்க விரும்பினால் கால நேரத்தை மறந்து விடு. ஏனெனில் தியானம் அழிவற்றதை தேடுவது. உனது வயதான தந்தையை பற்றி மறந்து விடு.  எப்போதும் யாரும் இறப்பதில்லை. என்னை நம்பு. ஒருநாள் நான் கூறுவதை உண்மை என நீ உணர்வாய். யாருக்கும் எப்போதும் வயதாவதுமில்லை, யாரும் இறப்பதுமில்லை. கவலைப்படாதே. எனக்கு உன் தந்தையை தெரியும். ஏனெனில் அவர் என்னிடம்தான் தியானம் கற்றுக்கொண்டார். அவர் இறக்கப்போவதில்லை  அவரது உடல் அழியலாம். ஆனால் நீ தியானம் கற்றுக்கொள்ள விரும்பினால் நீ உனது தந்தை உனது அரசாங்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து இருக்க வேண்டும். அதற்கு ஒருமுனைப்பட்ட அர்ப்பணிப்பு வேண்டும். என்றார்.
 
அந்த குரு அப்படிப் பட்டவர். அவரது இருத்தல் வலிமையானது. அந்த இளைஞன் தங்க முடிவெடுத்தான்.
 
மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. குரு தியானத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த இளைஞன் குருவுக்கு எல்லாவழிகளிலும் சேவை செய்து வந்தான். காத்திருந்தான், காத்திருந்தான், அவன் அதைப்பற்றி குறிப்பிடக்கூட அஞ்சினான். ஏனெனில் இங்கிருந்து வெளியே போய்விடு , நீ மிகவும் அவசரப்படுகிறாய் எனக் கூறிவிட்டால். அதனால் அவன் அதைப் பற்றி பேசக் கூட இல்லை.
 
ஆனால் மூன்று வருடங்கள் என்பது மிக அதிகம். முடிவில் ஒருநாள் காலை குரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, குருவே, மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் இன்னும் எனக்கு தியானம் என்பது என்ன. அதற்கு என்ன செய்ய வேண்டும் எனக்கூட கூறவில்லை. எனக் கேட்டான். 
குரு அவனை திரும்பி பார்த்துவிட்டு, பின்னர், நீ இன்னும் அந்த அவசரத்திலேயே இருக்கிறாய். சரி, இன்று உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார்.
 
அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். இளைஞன் கோவிலின் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். மிகவும் பலமாக தாக்கினார். அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது வந்து குரு தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட உன்னால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது இறங்கும். 
இளைஞன், என்ன வகையான தியானம் இது என நினைத்தான். ஏழு நாட்களில் அவன் மிகவும் சோர்ந்து போனான். காயங்களும் சிராய்ப்புகளும் அடைந்த அவன் குருவிடம், என்ன செய்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான். 
குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. கவனமாயிரு, தன்ணுணர்வோடு இரு, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார்.
 
தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். அவர் ஒரு பூனையைப் போல வருவார். பூனை எலியை பிடிக்க போகும்போது மிகவும் மெதுவாக சப்தமின்றி போகும். குரு உண்மையிலேயே வயதான பூனை போல.
 
ஆனால் இளைஞன் கவனமாகி விட்டான். அவன் அவருடைய காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.
 
அப்போது குரு, முதல்பாடம் முடிந்தது. இப்போது இரண்டாவது பாடம் ஆரம்பிக்கிறது. இப்போது நீ உன்னுடைய தூக்கத்திலும் விழிப்போடு இருக்கவேண்டும். உன்னுடைய கதவுகளை திறந்து வைத்திரு. ஏனெனில் நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன். என்றார்.
 
இது உண்மையிலேயே கடினமானது. ஆரம்பத்தில் அவர் வந்து அவனை கடினமாக அடித்தார். வயதானவருக்கு இரண்டு மணி நேர தூக்கம் போதுமானது. ஆனால் இவன் இளைஞன். இவனுக்கு எட்டு மணி நேர தூக்கம் தேவை. ஆனால் முழு இரவும் போராட்டமாக இருந்தது. பலமுறை குரு வந்து அவனை அடித்தார். ஆனால் முதல் பாடம் மிகவும் சிறப்பாக அவனை மிகவும் கவனமானவனாகவும் அமைதியானவனாகவும் மாற்றியிருந்ததால் அவன் இந்த முறை அவரை, இது என்ன மடத்தனம், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என கேட்கவில்லை.
 
குருவோ, கவலைப்படாதே. தூக்கத்தில் கூட கவனமாக இரு. நான் எவ்வளவு கடினமாக உன்னை அடிக்கிறேனோ அவ்வளவு விரைவாக தூக்கத்தில் கூட சுதாரிப்பாவாய். சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும், அவ்வளவுதான். என்றார்.
 
மூன்று மாதங்களுக்குள்ளாகவே அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான். அவன் உடனடியாக தனது கண்களை திறந்து, இருங்கள். இதற்கு அவசியமில்லை. நான் விழித்திருக்கிறேன். என்பான்.
 
மூன்று மாதங்களுக்கு பிறகு குரு, நீ இரண்டாவது பாடத்திலும் தேர்ந்து விட்டாய். இப்போது மூன்றாவதும் கடைசியுமானது. என்றார்.
இளைஞன், இரண்டு நிலைகள்  நடப்பது, தூங்குவது  தானே இருக்கின்றன. மூன்றாவது என்னவாக இருக்கும் என்றான்.
 
குரு, இப்போது நான் உன்னை உண்மையான கத்தியினால் அடிக்கப்போகிறேன். இதுதான் மூன்றாவது. என்றார்.
மரக்கத்தியினால் அடிக்கப்படுவது பரவாயில்லை. ஏனெனில் அதிகபட்சமாக பலமாக அடிபடும் அவ்வளவே. நீ இறந்து விடமாட்டாய். இப்போது குரு உண்மையிலேயே அசல் கத்தியை கொண்டு வந்தார். அவர் உறையிலிருந்து அசல் கத்தியை எடுத்தவுடன் இளைஞன் முடிந்தது நான் செத்தேன். இது ஒரு அபாயகரமான விளையாட்டு. அவர் இப்போது உண்மையான கத்தியினால் குத்தப் போகிறார். நான் கவனமின்றி ஒருமுறை இருந்தால்கூட அவ்வளவுதான் நான் முடிந்தேன். என நினைத்துக் கொண்டான்.
 
ஆனால் அவன் ஒருமுறை கூட தவற விடவில்லை. விஷயம் மிகவும் அபாயமானதாக இருக்கும்போது நீயும் அந்த அபாயத்தை சந்திக்கும் அளவு சக்தி பெற்று விடுவாய். மூன்று மாதங்களில்   குருவால் அவனை ஒருமுறை கூட உண்மையான கத்தியால் அடிக்க முடியவில்லை.
 
பின் குரு, உன்னுடைய மூன்றாவது பாடமும் முடிந்தது.  நீ தியானிப்பவனாக மாறி விட்டாய். நாளை காலை நீ புறப்படலாம். நீ போய் உன் தந்தையிடம் எனக்கு உன்னைப் பற்றி முழுத் திருப்தி என்பதை சொல். என்றார்.
 
நாளை காலை அவன் புறப்படப் போகிறான். அன்று மாலை சூரியன் மறைந்துக் கொண்டிருந்தான். குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார். இளைஞன் வேறு எங்கோ அமர்ந்திருந்தான். அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த கிழவனை அடிக்க வேண்டும். என்று தோன்றியது. இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை விட்டால் இனி முடியாது. நாளை காலை நான் புறப் பட வேண்டும் என எண்ணினான்.
 
அதனால் அவன் போய் மரக்கத்தியை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார். அவர் அவனை பார்க்கக் கூட இல்லை. இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல  அதிலும் நான் உன் குரு என்றார்.
 
இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.
 
குரு, ஒருநாள் உண்மையிலேயே நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும். முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது. பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். முன்பெல்லாம் எனது காலடி சத்தத்தை உனது தூக்கத்தில் உன்னால் கேட்க முடியாமலிருந்தது. ஆனால் இப்போது தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட எனது காலடி ஓசையை உன்னால் கேட்க முடியும். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும். சொல்லப்படாத எண்ணங்களையும் உன்னால் படிக்க முடியும். உள்ளுணர்வை தெரிந்து கொள்ள முடியும். உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும். அது உனது முயற்சியினால் அல்ல  நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார். 
 

Saturday, April 25, 2009

வெற்றி பெறும் வழி - விவேகானந்தர்



சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தார். அருகே சில இளைஞர்கள் ஆற்று நீரில் மிதந்து சென்ற முட்டை ஒடுகளை சுட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களில் ஒருவராலும் முட்டை ஓடுகளை குறிபார்த்து சுட முடியவில்லை.

அவர்களை புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் விவேகானந்தர். அவரின் சிரிப்பை கண்ட இளைஞர்கள் அவரிடம், கேலியாக பார்க்கிறீர்களே உங்களால் சுட முடியுமா? என்று சவால்விட்டனர்.

முயற்சி செய்கிறேன் என்றார் விவேகானந்தர் அடக்கமாக.. நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமான காரியல் இல்லை என்றனர் இளைஞர்கள்.

விவேகானந்தர் அவர்களிடமிருந்து துப்பாக்கியை வாங்கினார். ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு ஒவ்வொன்றாக 12 முட்டை ஓடுகளை சுட்டார். ஒரு முறை கூட அவரது குறி தவறவில்லை. இளைஞர்களுக்கு ஒரே வியப்பு. உங்களால் இது எப்படி முடிந்தது என்று கேட்டனர்.

விவேகானந்தர் பதிலளித்தார், நான் இப்போதுதான் முதல் தடவையாக துப்பாக்கியை கையில் எடுத்துள்ளேன். எதைச் செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும். அப்படி செய்தால் எதையும் சாதிக்கலாம். ஒன்றை செய்யும்போது இன்னொன்றை நினைக்கக் கூடாது என்றார்.

நாமும் வெற்றி பெற மனதை ஒருமுகப்படுத்துவோம்

Wednesday, April 8, 2009

தூரப்போ....

குகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன் விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடைய வேண்டும் என எண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீக வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் என விசாரித்தான்.

"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார். அவர்கிட்ட போமந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்சா போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும் போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா? "..என கூறிய அர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.

குகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்து வந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும் வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

சுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம் குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்க ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...

அதை கண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு "தூர போ " என ஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.

வெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்து விட்டார் என நம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் "தூரப்போ" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவு செய்து யாரும் தொந்திரவு செயாத வண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.

பல வருடங்கள் கடந்தது...

ஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்து தொடர்ந்து ...'தூரப்போ" எனும் மந்திர ஒலி கேட்ட வண்ணம் இருந்தது.
திடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்து கொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.

'தூரப்போ" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்து பாதையை மறைத்துக்கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான அந்த மரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் "தூரப்போ..."

பல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.

தனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.
கட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனது வாழ்கையை அமைத்து கொண்டார்.

யார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒரு முறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்...."தூரப்போ" உடனடியாக அவர்களின் கஷ்டம் விலகிவிடும்.

நோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து .."தூரப்போ" என்றதும் உடனடியாக குணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.

வயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனது சிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம் வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்த வேண்டும் என வேண்டினார்.

முதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில் விழுந்தார். "....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனது குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா? கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனே செய்கிறேன் என்றார்.." துரப்போ சுவாமிகளின்.

தனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில் உள்ள ரோகம் நீங்கியது.

பக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா என சந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.

தனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்த சுவாமிகள் ...."துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்த பாவிக்கு மோட்சம் அளியுங்கள் .." என வேண்டினார்.

"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்து நன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்... இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்..." என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.

பின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்..."எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...

"தூரப்போ"....

அங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...
தனது குரு பக்தனந்தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.

குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...

தெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே?

Tuesday, March 10, 2009

தியானத்தின் நன்மை

தியானம் என்பதை எல்லோரும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தியானம் என்று இவர் கேட்கிற கேள்வி சாமியை நினைப்பதைப் பற்றித் தான். தியானம் எல்லோருக்கும் இருக்கிறது. தியானம் இல்லையென்றால் நீ என்னைப் பார்ப்பதற்கு இங்கு வரவே முடியாது. அடிபட்டுச் செத்திருப்பீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்கள், எப்படிப் பயணப்படப் போகிறீர்கள், எப்போது சேருமிடத்தை அடையப் போகிறீர்கள், எப்போது எப்படி கிளம்புவது என்றெல்லாம் தெரியாமல் என்னை அடைந்திருக்க முடியாது. எனவே தியானம் என்பது உன்னி டத்தில் எப்போதும் இருக்கிறது. உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் நீ தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறாய். ஒரு தோசை சாப்பிடுகிறாய். தோசையை எடுத்து, சட்னியில் வைத்து வாய்க்கு அருகில் கொண்டு போவதும்கூட தியானம்தான். ஒரு பரீட்சை எழுதப் போகிறாய், பேனாவை எடுத்து வைத்துக்கொண்டு கேள்வித் தாளைப் பார்க்கிறாய். என்ன நினைக்கிறாயோ அதை எழுதுகிறாய். அதுவும் தியானம்தான். ஒரு கால்பந்தை உதைக்கிறாய், அதுவும் தியானம்தான். தியானம் இல்லாத விஷயம் இந்த உலகத்தில் எதுவும் இல்லை.

இவர் கேட்கிற கேள்வி சாமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் எனக்கு தியானம் வரவில்லையே என்பதுதான். அதற்கு என்ன காரணம் என்று அவரே யோசனை செய்தால் தெரிந்துவிடும். கண்ணை மூடிக்கொண்டு சுவாமியைப் பற்றி நினைக்கிறார் என்று வைத்துக் கொள். இவனுக்கு என்னவெல்லாம் ஞாபகம் வருகிறதோ, அந்த எண்ணமெல்லாம் இவனுக்கு சுவாமியை விடவும் முக்கியமான விஷயம் என்று அர்த்தம். அவனுடைய மனத்தில் அந்த விஷயங்க ளெல்லாம் சுவாமியை விடவும் முக்கியமான இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அதனால் இவன் கொடுக்கும் முக்கியத்துவம் என்றைக்கு இறைவனுக்கு மாறுகிறதோ அன்றைக்கு இவனுக்கு தியானம் வந்துவிடும்.

ஒரு உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள். எனக்கு வேலை வெட்டியே கிடையாது. எனக்கு ஒரு குறையும் உலகத்தில் கிடையாது. நான் சுவாமியை நினைக்காமல் வேறு என்னதான் பண்ணிச் சாகணும் சொல்லு? எனக்கு சாமி ஞாபகம்தான் வரும். ஏனென்றால் எனக்கு வேறு எந்த எண்ணங்களுமே இல்லையே!

ஆனால் உனக்கு அப்படி இல்லையே! உனக்குப் பெண்டாட்டி, பிள்ளை, குட்டி இருக்கிறது. கொஞ்சம் துட்டு வேண்டும். நாளை காலையில் பாங்கிற்குப் போகவேண்டும். 1008 தொந்தரவு இருக்கிறது. அதனால் உன்னால் சாமியை நினைக்க முடியவில்லை. அதெல்லாம் எண்ணத்தால் தான் வருகிறது. என்னை மாதிரி எல்லாவற்றையும் விட்டுவிடு. அப்பொழுது ஜாலியாக இருப்பாய். எந்த எண்ணமும் வராது. இங்கே உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே முருகர் உனக்கு தரிசனம் கொடுப்பார். அவரிடம் அரட்டை அடித்துக்கொண்டிருக்கலாம். நினைவுகள் அற்ற நிலை என்பது மற்ற நினைவுகளை அழித்த பின்னால் வரும். மற்ற நினைவுகள் இருக்கிற வரையிலும் அந்த எண்ணங்கள்தான் கடவுளுடைய எண்ணம் வரவிடாமல் தடுக்கும். அதனால் எப்போதாவது தான் கடவுளுடைய எண்ணம் வருகிறது, மற்ற எல்லா நேரங்களிலும் மற்ற எண்ணங்கள்தான் வருகிறது, இவ்வளவுதான் வித்தியாசம்.

- சிவசங்கர் பாபா

Monday, March 9, 2009

ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்றுங்கள், தியானம்!!


உங்கள் வாழ்க்கை யாத்திரையை காலையில் இருந்து தொடங்குவதாக மாற்றுங்கள் .

வாழ்க்கை ஒரு விளையாட்டு அதில் நீங்கள் விளையாட்டாக ஈடுபடுங்கள். வாழ்கையை விளையாட்டு கண்கொண்டு பாருங்கள். இறுக்கமற்ற நிலையில் விளையாட்டுத் தனத்திற்கும், இறுக்கமான நிலைக்கும் உள்ள வேறுபாடு மிகபெரியது. நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு செல்ல வீதியில் நடக்கும் போது உங்கள் மனம் முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இறுக்கமாக பேராசையோடு, கவலையோடு முரண்பட்டு இருக்கும். அதே பாதையில் நீங்கள் காலையில் கடந்து செல்லும் போது அதே வீதிதான், அதே மரம் தான், பறவைகளும் அதே தான் ஆகாயமும் அதே தான், அதில் செல்லும் மக்களும் அதே தான்.
உங்களிடம் எந்த இறுக்கமும் கிடையாது. எந்த முரண்பாடும் கிடையாது. ஏன் என்றால் நீங்கள் எந்த குறிபிட்ட இடத்திற்கும் செல்லவில்லை. வெறுமனே சாலையில் மகிழ்ச்சியாக நடக்கிறீர்கள் அவ்வளவுதான்.

அமைதியாக இருங்கள்:

இறுக்கமற்று விளையாட்டாக எதிலும் இடுபடுங்கள் பிறகு நீங்கள் செய்வது எல்லாம் தியானம் தான் விளையாட்டாக செய்யும் எதுவும் தியானதன்மை உடையதுதான். நீங்கள் இறுக்கமற்று, மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது உங்களிடம் இயற்கையாக எழும் ஒரு ஆனந்தம்தான் தியானம். எதையும் நீங்கள் தியானமாக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இறுக்கமற்ற விளையாட்டு தனம்தான். அப்பொழுது அது உங்களிடம் எந்த விதமான இறுக்கநிலையையும் உண்டு பண்ணாது. ஆகவே எப்படி பரபரப்பு இல்லாமல் இருப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள். காலையில் நடக்கும் வீதி இமயமலையில் உள்ள அமைதியான குகைக்கு சமம்.

வெளியே தள்ளுங்கள்:

பயம், பரபரப்பு, இறுக்கம் போன்ற உணர்ச்சிகள் ஆரம்பிக்கும் பொழுதே நீங்கள் ஆழமான மூச்சை வெளியே விட்டு அவைகளை வெளியே தள்ளுங்கள். காற்றில் அந்த பயத்தை, இறுக்கத்தை வெளியே முழுமையாகத் தள்ளிவிட்டதாக வெறுமனே உணருங்கள். பிறகு மூச்சை உள்ளே நன்றாக இழுங்கள். சுத்த காற்றை உள்ளே இழுத்து உங்கள் மார்பும், உள் காற்று குழாய்களும் நன்றாக விரிவடைவதை உணருங்கள். இதை போல ஏழுதடவை செய்தால், திடீர் என்று எந்தப் பிரச்சனையும் உங்களிடம் இல்லை என்பதை உணர்வீர்கள்.
இதை போல சுமார் 2 வாரம் செய்யுங்கள், இதில் முக்கியமான செய்தி நீங்கள் மூச்சை வெளியே விடும் போது நீங்கள் உங்களின் இறுக்கத்தன்மையைவெளியே விடுவதாக உணர்தல் தான். மூச்சை, எதையும் உங்களுக்குள் செலுத்தவும் வெளியே தள்ளவும் உபயோகிக்கலாம்.

ஓய்விற்கு இது நேரம் இல்லை:

சில சமயம் உங்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் அதற்காக கவலை படத் தேவைஇல்லை. அந்த நேரத்தை வேலை செய்ய உபயோகயுங்கள், சக்தியை அதில் உபயோகயுங்கள். மனம் மற்றும் உடல் களைக்கும்அளவுக்கு மேலும் கீழும் நடக்கலாம், சற்று ஓடலாம், நீண்ட தூரம் நடக்கலாம். படுக்கைகள் படுத்த படி துக்கத்திற்க்காக முயற்சிப்பதை விட இப்படி ஆககபுர்வமான வகையில் உங்கள் சக்தியை செலவுசெய்வது பயன் தரும்.