Thursday, December 4, 2008

வாழ்க்கை நிலையில்லாதது

இளமை இதோ
நண்பா உன் அழகையும் இளமையையும் மகிழ்ந்து கொண்டாடு. உன் அழகும் இளமையும் உன்னை விட்டோடும் வரை உனக்கு இது புரிவதில்லை. இன்னும் இருபத்து வருடத்தில் நீயே நம்பாத வகையில் உனக்கு வயதாகி இருக்கும். உன் அழகை உன்னால் கற்பனை கூட செய்ய முடியாது.

நாளையை பற்றிய கவலை உனக்கு வேண்டாம். கவலை கொள்வது தேவை இல்லாத ஒன்று.
வாழ்க்கையின் நிஜமான துன்பமே கவலை படுவதையே கொள்கையாக கொண்ட நம் உள்மனது தான்.
பிரச்சனைகள் வந்த வழியே போய்விடும். கவலை அவசியமற்றது.

இயல்பாய் இரு
வாழ்க்கையில் என்ன செய்ய போகிறேன் என்று அச்சம் கொள்ளாதே.
சில மனிதர்கள் இருபத்தைந்து வயதில் என்ன செய்ய என்று தெரியாமலே ஐம்பதில் பெரிய வெற்றி கண்டார்கள்.
பலருக்கு அறுபது ஆகியும் என்ன செய்ய என்று தெரியவில்லை.

அவசியமானது ஆரோக்யமே
நன்றாக சாப்பிடு.
இந்த அவசர கலாச்சாரத்தில் அவசர அவசரமாக சமைக்க படும் அவசர உணவகத்தில் வாழ்க்கைக்காக, வாழ்வதற்க்காக உன்னதே.
உன் கால்களை வலுவாக வைத்து கொள்.
அது வலு இழந்தால் அதிக அவஸ்தை கொடுக்கும்.

உன் உடம்பே இப் புவியில் உன் சொத்து.
அதை வைத்து உன் இஷ்டம் போல கொண்டாடு.

மகிழ்ச்சியாய் இரு.
நீ செய்யும் வேலைகள் உன் மகிழ்ச்சிக்காக மட்டுமே.
நீ மகிழ்ச்சிக்காக செய்த வேலைகலை விட மகிழ்ச்சியாக செய்த வேலைகளே உன் நினைவில் என்றும் இருக்கும்.
செய்வது அனைத்தையும் மகிழ்ச்சியாகவே செய்திடு.
எத்தையும் அதிகம் நேசிக்காதே.
அழகு குறிப்புகள் பார்கதே அது உன்னை அழகு குறைவாக என்ன வைக்கும்.

பணம்.
நிறைய சம்பாரி நிறைய செலவு செய்.
சம்பாரிப்பதையே லட்சியமாக்கிகொள்ளதே.
பணத்தை யாரும் விரும்பவில்லை, அது வாங்கி தரும் பொருளையே விரும்புகிறோம்.
சேமிக்க பழகிகொள், அது உதவும்.

உறவுகள்.
பெற்றோகளிடம் அன்பாய் இரு.
அவர்கள் காலம் என்று வரை என்று தெரியாது.
சகோதரர்களிடம் அன்பை பகிர்ந்து கொள்.
அவர்களே உன் பிரதிபலிப்பு.

நண்பர்கள் பலர் வருவதுண்டு.
சில முத்துக்களை சேகரிக்க கற்றுக்கொள்.

உலகை பார்த்து மகிழ்.
வயதானதும் இளமை காலத்து நண்பர்கள் நினைவுக்கு வருவார்கள்.
சேமித்த பணத்தில் உலகை சுற்றி பார்.
அதிக நாள் எங்கும் தங்கி வாழ்க்கையை சலிக்க செய்யாதே.
உலகம் எண்ணற்ற அதிசயங்களை உள்ளடக்கி கொண்டுள்ளதை பார்.

வாழ்கை.
சில உண்மைகளை ஏற்று கொள்ள பழகிகொள்.
பணத்தின் மதிப்பு குறையும்.
அரசியல்வாதிகள் அதிகமாக பொய் சொல்வார்கள்.
உனக்கும் வயதாகும்.
யாரையும் துணையாக எதிர் பார்கதே.
உனக்கு ஒரு நல்ல நண்பன் இருக்கலாம்.
உனக்கு ஒரு செல்வ செழிப்பான துணை இருக்கலாம்.
யார் காலம் என்று வரை என்று தெரியாது.

தலைமுடிக்கும் கவனம் கொடு.
அல்லது அது உண் நாற்பதை என்பதாய் காட்டும்.

மற்றவர்க்கு தொல்லையாய் இராதே.
உனககு தொல்லை தருபவரிடம் நெருக்கம் வேண்டாம்.
பொறாமை கொண்டு காலத்தை வீண் செய்வதை தவிர்.
சில சமயம் நீ முன்னே செல்வாய்.
சில சமயம் நீ பின்னே செல்வாய்.
வாழ்க்கை பாதை வெகு தொலைவு.
இறுதியில் போட்டி உனக்கும் உனக்குமே தான்.

பாராட்டுகளை மறந்து விடாதே.
அவமானங்களை மறந்து விடு.
காதல் கடிந்தங்களை சேகரித்து வைத்துகொள்.
வங்கி கணக்குகளை துக்கி எறி.

உனக்கு திருமணம் ஆகலாம்.
ஆகாமல் போகலாம்.
உனக்கு குழந்தை பிறக்கலாம்.
பிறக்காமல் போகலாம்.
உனக்கு நாற்பதில் விவாகரத்து ஆகலாம்.
அறுபதம் கல்யாணம் கோலாகலமாக நடக்கலாம்.

எது செய்தலும் உன்னை நீயே அதிகமாக பாராட்டி கொள்ளாதே அதிகம் தாழ்த்தியும் என்னதே.
உனது வாய்ப்புகள் பாதி தான்.
அனைவரது வாய்ப்பும் பாதியே தான்.

மரணம்.
புவியில் பிறப்பெடுத்த அனைத்து ஜீவனும் சந்திக்க போகும் ஒரு அற்புதம்.
வாழ்க்கை பயணம் இனிதே முடியும் நேரமது.

No comments:

Post a Comment