Saturday, December 6, 2008

ருபாய்

ஒரு 200 பேர் இருக்கற ரூம்ல ஒருத்தர் (அவங்களுக்கு செமினார் எடுக்க வந்தவர்) பேச ஆரம்பிச்சார். ஒரு புது ருபாய் தாளை எடுத்து அவரது கையில் உயர்த்தி பிடித்தவாறு இது யாருக்கு வேணும்னு கேட்டார். அனைவரும் அவர்களது கைகளை உயர்த்தினர்.

பின்பு அவர் அந்த தாளை கசக்கி சுருட்டி பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

பின்பும் அவர் அந்த தாளை கசக்கி கீழே போட்டு செருப்பால் மெத்து நசுக்கி கிட்ட தட்ட ஒட்டு போட்ட ருபாய் தாள் போல் மாற்றி விட்டு பின்பு மீண்டும் அதையே கேட்டார். ஒரு கை குட கீழே போகவில்லை.

அப்போது அவர்

நண்பர்களே இந்த நிமிடம் நீங்கள் ஒரு அற்புதமான பாடத்தை கற்று கொண்டு இருப்பிர்கள். நான் இந்த ருபாய் தாளை என்ன செய்தலும் சரி உங்களில் ஒருவரது கை குட கீழே இறங்கப்போவதில்லை, காரணம் அந்த ரூபாயின் மதிப்பு குறைவதில்லை இல்லை. அது அழுக்கனாலும் அதன் மதிப்பு குறையாது.

வாழ்க்கையில் பல முறை நாம் கீழே விழுவோம், மனதால் ஒடிந்து நோருங்குவோம், நாம் எடுக்கும் முடிவுகளால் சாக்கடையில் தள்ள படுவோம். நாமே நம்மை எதற்கும் ப்ர்யோஜனமட்ட்றவர் என எண்ணுவோம்.

ஆனால் நண்பா, எத்து நடந்தாலும் நாம் நம் மதிப்பை இழக்க போவதே இல்லை, நீ ஒடிந்து நொறுங்கி குப்பையில் எரியாப்பட்டலும் உன்னை உண்மையாய் நேசிப்பவர்களுக்கு நீ என்றுமே விலைமதிப்பில்லா மாணிக்கம் தான். நம் வாழ்வின் மதிப்பு நாம் என்ன செய்கிறோம் என்பதால் வருவதல்ல, நாம் யார் என்பதால் மட்டுமே. நீ தனித்தன்மை வாய்ந்தவன் என்பதை என்றும் மறவாதே

No comments:

Post a Comment