Monday, December 29, 2008

நான்கு மனைவிகள்

முன்னொரு காலத்தில்......

ஒரு ஊரில் ஒரு செல்வ செழிப்பான ராஜா இருந்தார். அவருக்கு நான்கு மனைவிகள்.

அவர் நான்காம் மனைவியை மிகவும் நேசித்தார். அனைத்து செல்வங்களையும் அவளுக்காகவே செலவிட்டார். தன்னிடம் உள்ளத்தில் சிறப்பானதை மட்டுமே அவளுக்கு கொடுத்தார்.

அவர் முன்றாம் மனைவியையும் நேசித்தார். அவளுக்கு அவரது மற்ற ராஜாங்கத்தைகாண்பித்து மகிழ்வூட்டுவார். ஆனாலும் அவள் என்றாவது வேறொருவனுடன் சென்றுவிடுவாள் என அஞ்சினார்.

அவர் தனது இரண்டாம் மனைவியையும் நேசித்தார். அவள் எப்போழ்தும் அவரிடம் அன்பாய் நடந்துகொள்வாள்.அவர் சோர்ந்து போகும் போதோ அல்லது அவர் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கும்போதோ அவள் ஆதரவாக இருந்து ஆலோசனையும் வழங்குவாள்.

ராஜாவின் முதல் மனைவி மிகவும் முக்கியமானவள். அந்த ராஜாங்க சொத்துக்களை கவனிப்பதற்கும், ராஜா ஆட்சி செய்வதற்கும் அதிக பங்கு அவளையே சேரும். அவளே அனைத்திற்கும் காரணமானவள். எனினும் ராஜாவுக்கு முதல் மனைவி மீது அவ்வளவு பற்றுதல் இல்லை. எப்போழ்தாவது தான் அவர் அவளை கவனத்தில் கொள்வார்.

ஒரு நாள் ராஜா மரண படுக்கையில் அவர் காலம் முடியும் தருணத்தில் இருந்த போது...

அவரது ராஜ வாழ்கையை எண்ணினார், "எனக்கு நான்கு மனைவிகள், ஆனால் நான் மரணமடைந்தால் நான் தனியயிருப்பேனே" என்றேன்னினார்.

அவர் நான்காம் மனைவியிடம் "நான் உனைத்தான் மிகவும் அதிகமாய் நேசித்தேன், என்னிடம் இருந்ததில் சிறந்தவை அனைத்தையும் உனக்கே கொடுத்தேன் ,இப்பொழ்து நான் மரணமடைய போகிறேன், நீ என்னை பின் தொடர்ந்து வருவாயா?"

"முடியாது!" என்றவாறு அவள் நடந்து சென்று விட்டாள்.

ஒரு கத்தி அவரது நெஞ்ஜை கிழிப்பது போல் இருந்தது ராஜாவுக்கு.

அவர் முன்றாம் மனைவியிடம் "நான் உன்னை என் வாழ்நாள் முழுவதும் நேசித்தேன். இப்பொழ்து நான் மரணமடைய போகிறேன், எனக்கு துணையாய் வருவாயா?"

"முடியாது, வாழ்கை இனிமையாய் உள்ளது, நீ மரித்தால் நான் மறுமணம் செய்து கொள்வேன்" என்றவாறு அவள் நகர்ந்து சென்றாள்.

அவரது இதயம் கணத்தது.

அவர் இரண்டாம் மனைவியிடம் "நான் உன்னிடம் தான் அதிகமான ஆலோசனைகள் கேட்டுள்ளேன், நீ எனக்காக பல நன்மைகள் செய்துள்ளாய், நான் மரணமடைந்தால் நீ என்னுடன் வருவாயா?"

"என்னை மன்னிக்கவும், என்னால் இப்பொழுது உணக்கு உதவ இயலாது, என்னால் உனக்காக ஒரு பூச்சண்டு தான் அனுப்ப முடியும்" என்றவாறு அவளும் சென்று விட்டாள்.

அந்த பதில் ராஜாவின் நெஞ்சில் இடி போல் விழுந்தது. அவர் நிலை தடுமாறினார்

அப்பொழ்து ஒரு குரல் அவருக்கு கேட்டது:


"நான் உன்னுடன் நீ எங்கு சென்றாலும் வருவேன்". ராஜா நிமிர்ந்து பார்த்தார். அது அவரது முதல் மனைவி. எலும்பும் தோலுமாக அவள் காட்சியளித்தாள்.

அப்போது ராஜா, "எனக்கு வாய்ப்புகள் இருந்த பொழுதே உணக்கு நான் அதிக கவனம் செய்திருக்க வேண்டும்"என்றவாறு வருந்தினார்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

உண்மையில் நம் அனைவருக்கும் இந்த நான்கு மனைவிகளும் வாழ்வில் உள்ளனர்...

நான்காம் மனைவி நமது உடல். அதற்க்கு என்னதான் நன்மை செய்தாலும் அது நம்மை விட்டு சென்று விடும்.

முன்றாம் மனைவி செல்வம், அந்தஸ்து மற்றும் நம் உடைமைகள். நம் மரணத்திற்கு பிறகு அது மற்றவரது கைகளுக்கு சென்று விடும்.

இரண்டாம் மனைவி குடும்பமும் நண்பர்களும். அவர்களால் சுடுகாடு வரை தான் நம்மோடு அதாவது நம் பிணத்தோடு வர முடியும்.

முதல் மனைவி, ஆண்மா

வாழ்கை போராட்டத்தில், செல்வம், அந்தஸ்து, அதிகாரம், இவற்றை தேடும் வேகத்தில் நம் அனைவராலும் அதிகமாக அது நிராகரிக்கப்படும்.

எது எப்படியோ, அது எப்போழ்தும் நம்மோடு தான் இருக்கும்.

ஆன்மாவை பிரகாசப்படுத்து
உன் வாழ்கை பிரகாசிக்கும்

No comments:

Post a Comment