நீ மட்டுமே உன்னை போல் இருக்கிறாய்
நீ மட்டுமே உன்னை புரிந்து கொண்டாய்
நீ மட்டுமே உணக்கு சொந்தம்
நீ மட்டுமே உனக்காக வாழ்கிறாய்
நீ உணக்கு மட்டுமே உண்மையானவன்
நீ உணக்கு மட்டுமே இனிமையானவன்
நீ உணக்கு மட்டுமே மதிப்பானவன்
நீ உணக்கு மட்டுமே இன்றியமயதவன்
நீ சூட்டப்பட்ட பெயரல்ல
நீ செய்யும் வேலையல்ல
நீ உறவுகளை காக்கும் மனிதனல்ல
நீ உயிர் கொடுக்கும் தாயல்ல
நீ குறியீடுகள் காடும் இருபாலல்ல
நீ எண்ணங்களால் நிறைந்த மனமல்ல
நீ உயிரை காக்கும் உடலல்ல
நீ இறையையே காக்கும் சமயமல்ல
நீ தனித்தன்மைகள் நிரம்பிய தன்மை
நீ காலப்பதிவுகள் உறங்கும் பெட்டகம்
நீ உண்மைகள் கொட்டிகடக்கும் பெருங்கடல்
நீ நிஜத்தின் முழு வடிவம்
நீ பிரபஞ்சத்தின் வெற்றி
நீ பரிணாமத்தின் உச்சகட்டம்
நீ ஒரு விந்து வளர்ந்த கதையல்ல
நீ பிரபாஞ்சத்தை கட்டிய அணுக்களின் சேர்க்கை
நீ பிரபஞ்சத்தின் சுருக்கம்
நீ எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன்
நீ உன்னை அறிந்து கொள்
நீ எல்லாம் அறிவாய்
அபி
3/12/2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment