தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.
உறக்கத்தின் போழுது நாம் குறைந்த அளவு பிரபஞ்ச சக்தியை பெருகிரோம்.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடங்கு விரிவடைய செய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவை திறக்கவும் விரிவடையவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்தி நம்மை சந்தொஷப்படுத்தும்.
நம் ஆரொக்கியத்தை அதிகரிக்கும்.
முழு மனநிறைவுடன் காணப்படுவொம்.
மேலும் பல சிகரங்களை தோடச்செய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.
தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும் தாண்டி.
"தியானம்" செய்வதற்கு முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட சேயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும், பார்ப்பது, பேசுவது, யொசிப்பது பொன்ற சேயல்களையும்.
"தியானம்" - தெரிந்து கோள்ளலாம்.

தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலை கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமர சேய்வது.
எந்த முறையிலும் அமர்ந்து கோள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.
தரையில் அமர்ந்துகோண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகோண்டோ தியானம் மேற்கோளள்லாம் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து தியானம் சேய்ய வசதியாக உளள்தோ அந்த இடத்தில் தியானம் சேய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சப்பண்மிட்டுக் கொள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மூடுங்கள்.
அமைதியான நிலையில் சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம்.
மந்திரங்களை ஒதும்போழுதோ அல்லது முணுமுணுக்கும் போழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும்.
அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனதிற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை, அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுக்காற்றை கவனிக்க துவங்கவேண்டும்.
கவனித்தல் என்பது நமக்குள் இருக்கும் இயற்கையான குணம்.
நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கும் போது,
மூச்சு விடுவதை ஒரு செயலாக எண்ணி செய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதையும், வேளியே விடுவதையும் நாம் நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பது தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.
எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகள் குறையும். மேதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது எண்ணங்கள் அற்ற நிலை என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாக சேய்வதன் மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்.
இதை தெய்வீக் வடிவம், புத்தரின் நிலை என்று கூரலாம்.
நன்றி மெடிடேஷன் குரு

No comments:
Post a Comment