Sunday, January 4, 2009

மகிழ்ச்சி

'இன்று நீ செயும் வேலை
உனது நாளைய மகிழ்ச்சிக்காக'
இதை நீ எந்த அடிப்படையில் நம்பினாய்?

மகிழ்ச்சி என்பது
உன்னுள் இருந்து மலரவேண்டியது

நீ செய்யும் வேலை
நீ சம்பாதித்த பணம்
நீ வாங்கிய சொத்து

இவை ஏதும் உனக்கு நிரந்தரம் இல்லை
இவை ஏதும் உனக்கு சொந்தம் இல்லை
இவை ஏதும் உனக்கு நிரந்தரமாக
மகிழ்ச்சியை கொடுக்க போவதில்லை

நிம்மதி மகிழ்ச்சி எதுவாயிருந்தாலும்
அதை உனக்குள் தேடு
அது உனக்குள்ளேதான் உள்ளது
எப்பொழுதும் மலர்ந்து கொண்டிருக்கிறது

குழந்தையாய் இருந்த பொழுது
நீ மகிழ்ச்சியாக இருப்பதற்கு
உனக்கு காரணம் தேவை பட்டதில்லை
நீ எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பாய்
அந்த மகிழ்வை நீ உன் வாழ்க்கை ஓட்டத்தில்
தொலைத்து விட்டாய்

வாழ்க்கை உனக்கு பலவற்றை கற்றுகொடுத்து
அந்த கற்றுகொண்ட விஷயங்கள்
உன் மகிழ்ச்சியை தொலைக்க செய்தது
உனது மகிழ்ச்சி உன்னுள் புதையுண்டது

வாழ்க்கை உனக்கு மகிழ்ச்சியை வெளியே
தேட கற்று கொடுத்து
இயற்க்கை உனக்கு மகிழ்ச்சியை உள்ளேயே
கொடுத்துள்ளது

இயற்கையாய் இரு
மகிழ்ச்சியாய் இரு

No comments:

Post a Comment