சுற்றும் பூமி
இளைப்பாற நின்றால்?
தழுவும் காற்று
இல்லாமற் போனால்?
விரிந்த வானம்
சுருண்டு விழுந்தால்?
இரவின் நிலவு
இருளில் கரைந்தால்?
சுட்டெரிக்கும் சூரியனின்
வெப்பம் தணிந்தால்?
விண்ணின் நட்சத்திரங்கள்
சிதறி தெரித்தால்?
இதில் எது நடந்தாலும்
துடிக்கின்ற இதயத்திற்கு ஓய்வு கிட்டுமே
எண்ணிப்பார்க்கையில்
பிரபஞ்சமே எனக்காக இயங்குவது தெரிகிறது
எனக்குள் பிரபஞ்சத்தை
உணரும் பொழுது ..............
பிரபஞ்சம் மட்டுமே இருக்க கண்டேன்.
அபி
05/01/2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment